உலகை உலுக்கப் போகும் அமெரிக்கா - ரஷ்யா: முடிவுக்கு வருகிறது இறுதி அணு ஆயுத ஒப்பந்தம்!
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே தற்போது நடைமுறையில் உள்ள கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமான ‘நியூ ஸ்டார்ட்’, பெப்ரவரி 5 ஆம் திகதி முடிவடைவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது காலாவதியானால், பனிப்போர் காலத்துக்குப் பிறகு இரு நாடுகளும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அணு ஆயுதங்களை குவிக்கும் போட்டியில் இறங்கும் அபாயம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குறித்த ஒப்பந்தைத்தை தற்காலிகமாக தொடர பரிந்துரைத்துள்ளார், ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதுவரை அதற்கு பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
அணு ஆயுதங்கள்
2010-ஆம் ஆண்டு, அமெரிக்கா-ரஷ்யா இடையே கையெழுத்தான நியூ ஸ்டார்ட் ஒப்பந்தத்தின் படி, இரு நாடுகளும் தலா 1,550 அணு ஆயுதங்கள் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும்.

Image Credit: PBS
இந்த நிலையில், “ஒப்பந்தம் காலாவதியானால் ஆகட்டும். இதைவிட சிறந்த புதிய ஒப்பந்தத்தை உருவாக்குவோம்.” என ட்ரம்ப் அண்மையில் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடன் புதிய அணு ஆயுதக் குறைப்புப் பேச்சுவார்த்தையில் சீனாவும் ஈடுபட வேண்டும் அமெரிக்கா விரும்புகிறது.
நிபுணர்களின் எச்சரிக்கை
எனினும், சீனா அணு ஆயுத வளர்ச்சியில் கவனம் செலுத்துவதால் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள மறுக்கிறது. இதனால் அமெரிக்கா ஆயுதக் கையிருப்பை அதிகரிக்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

Image Credit: Financial Times
இவ்வாறானதொரு பின்னணியில், ஒப்பந்தம் இல்லாமல் போனால், அமெரிக்கா-ரஷ்யா இடையே சந்தேகக் கண் கோட்பாடு அதிகரித்து, பொருளாதாரச் செலவுகள் அதிகரிக்கும் என்றும் உலகளாவிய பாதுகாப்பற்ற சூழல் உருவாகும் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 2 நாட்கள் முன்