இலங்கைக்கு உதவ முன்வந்த கனேடிய தமிழர்கள் - இலங்கை அரசின் தடையால் ஏமாற்றம்
இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கு உதவும் வகையில் கனேடிய தமிழர் அமைப்பு ஒன்று உதவ முன் வந்த போதிலும் அந்த அமைப்பிற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை இப்போது கடினமான ஒரு சூழலில் உள்ளது என்று தெரிவித்துள்ள கனடாவின் ரொரன்றோவில் இலங்கைக்கான consul generalஆக பொறுப்பு வகிக்கும் Thustara Rodrigo, ரொரன்றோவில் வாழும் இலங்கையர்கள் இலங்கைக்கு உதவ விரும்புவதாகக் கூறி, தூதரக அலுவலகத்தை அணுகி வருவதாக தெரிவிக்கிறார்.
ஆனால், கனடா தமிழ் காங்கிரஸ் ஆலோசனைக் குழு உறுப்பினரான Ken Kandeepan, இலங்கைக்கு உதவி அனுப்புவதை இலங்கை அரசு கடினமாக்கியுள்ளது என்கிறார்.
அதற்குக் காரணம், கனடா தமிழ் காங்கிரஸ் உட்பட பல தமிழ் அமைப்புகள் மீது இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு தடைகள் விதித்துள்ளதுதான் என்று கூறும் அவர், ஆகவே எங்களால் நேரடியாக எந்த உதவியும் செய்யமுடியவில்லை என்கிறார்.
ஆக, கனடா வாழ் தமிழர்கள் இலங்கைக்கு உதவ விருப்பம் தெரிவித்தும், இலங்கை அரசின் தடைகளால், உதவ இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் வருத்தம் அடைந்துள்ளார்கள்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
