ரிஷாட் பதியுதீனை எச்சரித்துள்ள முக்கிய புள்ளி: எதிர்க்கட்சிகளுக்குள் வெடிக்கும் மோதல்!
ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பல எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த எதிர்க்கட்சி அரசியல்வாதி எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், தான் உட்பட பல கட்சித் தலைவர்களை அந்த சக்திவாய்ந்த அரசியல்வாதி குற்றம்சாட்டி எச்சரித்ததாக கூறியுள்ளார்.
நாரஹேன்பிட்டியில் உள்ள பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு 17 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டதாகவும், தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் அரசியல் நிலைமை குறித்து நீண்ட கலந்துரையாடல் நடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சகளுக்குள் மோதல்
இந்த நிலையில், குறித்த சந்திப்பு மற்ற எதிர்க்கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதியின் அரசியல் நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோரை இதுபோன்ற கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்க்குமாறு அவர் கூறியுள்ளார்.
அத்தோடு, எதிர்க்கட்சகளுக்குள் ஏற்பட்டுள்ள உள் மோதல்கள் மற்றும் ஒற்றுமையின்மையை இந்த நிலைமை பிரதிபலிக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த சந்திப்புப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ள தொடர்புடைய சக்திவாய்ந்த எதிர்க்கட்சி அரசியல்வாதியின் பெயர் இன்னும் தெரியவரவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
