வவுனியாவில் தலைமறைவான மூவரை தேடி காவல்துறை வலைவீச்சு!
ஆயுதங்களை வைத்திருந்தது தொடர்பாக தேடப்படும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
2025 ஜூலை மாதத்தில் கிரிபத்கொடையில் நடத்தப்பட்ட சோதனையின் போது ஒரு சந்தேக நபர் T-56 துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், வவுனியாவில் கைக்குண்டுடன் மற்றொரு சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சந்தேகநபர்கள் தலைமறைவு
விசாரணைகளைத் தொடர்ந்து, கைக்குண்டு வைத்திருந்த ஒரு சந்தேக நபரும் அவருடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்களும் பற்றிய தகவல்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நிலையில், வவுனியா காவல்துறை சந்தேக நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்த போதிலும், அவர்கள் தங்கள் வசிப்பிடப் பகுதிகளிலிருந்து தப்பிச் சென்றது கண்டறியப்பட்டுள்ளது.
பொதுமக்களின் உதவி
எனவே, 30 மற்றும் 27 வயதுடைய மூன்று பேரை கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
சந்தேக நபர்கள் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள் 071-8591966 அல்லது 071-8596150 என்ற எண்களில் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
