கோல்டன் விசாவை முடிவுக்கு கொண்டுவந்த பிரபல நாடு
அவுஸ்திரேலியாவில் பெருந்தொகை முதலீடு செய்யும் செல்வந்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கோல்டன் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
சில நாடுகளில் பெருந்தொகையிலான முதலீடுகளை மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களுக்கு கோல்டன் விசா வழங்கப்படும்.
பொருளாதார விளைவு
அதேபோல், அவுஸ்திரேலியாவும் செல்வந்தர்களுக்கு கோல்டன் விசாவை வழங்கி வந்துள்ளது, எனினும் அந்த விசாவினால் எதிர்பார்த்த பொருளாதார விளைவுகளைக் கொடுக்கவில்லை என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அந்த விசா வழங்குவது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
அத்தோடு, ஊழல் பேர்வழிகள், தங்கள் மோசடிப் பணத்தைக் கொண்டுவந்து அவுஸ்திரேலியாவில் கொட்டுவதற்கு இந்த திட்டம் வழிவகை செய்வதாக நீண்ட நாட்களாகவே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன.
கோல்டன் விசாவின் முடிவு
இந்நிலையில், தங்கள் நாட்டுக்கு பலனளிக்காத திட்டத்தை ரத்து செய்வது என முடிவு செய்துள்ள அவுஸ்திரேலியா, அதற்கு பதிலாக கூடுதல் திறன்மிகுப் பணியாளர்கள் விசாக்களை வழங்க தீர்மானித்துள்ளது.
அதேவேளை, 2012ஆம் ஆண்டு முதல், ஆயிரக்கணக்கானோருக்கு இந்த விசா வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 85 சதவிகிதம் சீனாவிலிருந்து வருபவர்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |