கஞ்சா இலங்கையின் கலாசாரம்: இதன் ஏற்றுமதி திட்டம் வரவேற்கதக்கது! நாடாளுமன்றில் ஆதரவு
சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் யோசனைகள் சிறந்த யோசனைகள் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "பின்தங்கிய பாடசாலைகளுக்கு கணனி இணைய வசதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ரணில் விக்ரமசிங்க, பிரதமராக இருந்த போது நிறைவேற்ற முடியாமல் போனது.
கஞ்சா இலங்கையின் கலாசாரம்
எனினும் அதிபராக அவர் இதனை மீண்டும் நடைமுறைப்படுத்த முயற்சித்துள்ளமை சிறந்த விடயம்.
அன்று பின்தங்கிய பாடசாலைகளுக்கு கணனி இணைய வசதிகளை வழங்கியிருந்தால், கோவிட் காலத்தில் மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்றிருப்பார்கள்.
மேலும் கஞ்சா ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியமையும் சிறந்தது. கஞ்சா இலங்கையின் கலாசாரம். வெள்ளையர்கள் புகையிலை அறிமுகம் செய்து, கஞ்சாவை இல்லாதொழித்தனர்.
புகையிலை எவரும் பயன்படுத்தவில்லை என்பதால், வெள்ளையர்கள் கஞ்சாவை தடை செய்தனர்.
கஞ்சாவில் மருந்துகளை தயாரித்து ஏற்றுமதி செய்யலாம். இதன் மூலம் வருடாந்தம் பெரும் வருவாயை ஈட்ட முடியும் என ராஜித சேனாரத்னசுட்டிக்காட்டியுள்ளார்.