யால வனப்பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட கஞ்சா தோட்டம்
யால வனப்பகுதியில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட பாரிய கஞ்சா பயிர்ச்செய்கை ஒன்றை இராணுவம் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
குறித்த வனப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த கஞ்சா பயிர்ச்செய்கை பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், அங்கு 21,260 காய்ந்த கஞ்சா மரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இவற்றின் பெறுமதி 60 இலட்சம் ரூபாவிற்கு அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினர் விசாரணை
குறித்த சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை இன்று (27) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய நடவடிக்கையின் கீழ் 818 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருட்கள் கைப்பற்றல்
அவர்களில் ஒருவருக்கு தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், மேலும் 08 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சோதனையில் 159 கிராம் ஹெரோயின், 112 கிராம் ஐஸ் மற்றும் 329 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |