இலங்கையில் 10 ஆயிரம் ஏக்கரில் கஞ்சா தோட்டம்! முன்வைக்கப்படவுள்ள தீர்மானம்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Ministry of Health Sri Lanka
By pavan
இரத்தினபுரி மாவட்டத்தில் கஞ்சா பயிர்செய்கை தொடர்பான யோசனை ஒன்றை சுகாதார அமைச்சு அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளது.
குறித்த பிரதேசத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் கஞ்சா பயிர்ச்செய்கை மேற்கொள்ளவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் ஊடாக சுதேச வைத்தியத்துறை ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இந்த யோசனையை முன்வைக்க உள்ளார்.
நாட்டு நெருக்கடிக்கு தீர்வு
இந்த யோசனையானது எதிர்வரும் 5 ஆம் திகதி அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்குலக நாடுகளின் சந்தைகளில் கஞ்சாவுக்கு மிகப் பெரிய கேள்வி நிலவுவதாகவும் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் நிலைமையில் கஞ்சாவை ஏற்றுமதி செய்வது வெளிநாட்டு வருமானத்தை ஈட்ட சிறந்த வழியாக இருக்கும் என ராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி சுட்டிக்காட்டியுள்ளார்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்