நாளுக்கு நாள் உக்கிரமடையும் போர்! இஸ்ரேல் வெளியிட்ட அறிவிப்பு
ஹமாஸுடனான போரை நிறுத்த முடியாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.
அத்துடன், பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை காசாவிற்கான எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என்றும் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
ஹமாஸ் - இஸ்ரேல் மோதலில் இதுவரை 10,300க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 4000-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள். இஸ்ரேலில் 1,400 பேர் பலியாகியுள்ளனர்.
242 பேர் ஹமாஸ் படையினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். ஆனால் இன்னும் போருக்கு சுமூக தீர்வு எட்டப்படவில்லை.
போர் நிறுத்த அழைப்பு
உலகத் தலைவர்கள் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதனை மறுத்து வருகிறார்.
அமெரிக்கா, ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு முழு ஆதரவு அளித்துள்ளது.
அதே சமயம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "ஹமாஸை அழிப்பது அவசியம். ஆனால் அதற்காக ஹமாஸ் பிடியில் உள்ள காசாவை முழுவீச்சில் இஸ்ரேல் ஆக்கிரமிக்க நினைப்பது தவறு. மனிதாபிமான போர் நிறுத்தம் தேவை" என்று கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.