விஜயகாந்த் நினைவாக கிராமமக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்
மறைந்த நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் நினைவான அவரின் பெயரை ஒரு கிராமத்தின் தெருவுக்கு சூட்டியுள்ளனர்.
விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் திகதி உடல்நலக் குறைவால் காலமானார்.
இவரது மறைவுக்கு ஏராளமான பொதுமக்களும், திரைப்பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர்.
கேப்டன் விஜயகாந்த் தெரு
இவரின் மறைவுக்கு நேரில் வரமுடியாத பல பிரபலங்களும் தேமுதிக அலுவலத்தில் அவரது நினைவாலயத்திற்கு தற்போது வரை வந்து, நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் மறைவை ஒட்டி அவரது பெயரைச் சாலைக்குச் சூட்ட வேண்டும், அவருக்குத் திருவுருவ சிலை அமைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அருகே மேல்மனம்பேடு கிராமம், கீழ் மனம்பேடு பகுதியில் உள்ள ஒரு சாலைக்கு அந்த கிராமத்தினர், 'கேப்டன் விஜயகாந்த் தெரு 'எனப்பெயர் சூட்டியுள்ளனர்.
நெகிழ்ச்சி செயல்
மேலும், அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் அவர்கள் மரியாதை செய்துள்ளனர்.
கிராம மக்களின் இந்த செயல் விஜயகாந்த் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் இந்த செயலைப் பாராட்டி, இந்த புகைப்படங்களை அவர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |