கிளிநொச்சியில் நடுவீதியில் திடீரென பற்றி எரிந்த கார்!
கிளிநொச்சியில் (Kilinochchi) வீதியில் பயணித்துக் கொண்டிருந்த காரொன்று திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (05) கிளிநொச்சி ஏ-9 வீதியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகாமையில் பயணித்துக் கொண்டிருந்த காரே இவ்வாறு திடீரென தீ விபத்திற்குள்ளாகியுள்ளது.
தீயணைப்பு பிரிவு
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த காரை விட்டு சாரதி இறங்கியதால் அவர் தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளார்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் தீயணைப்பு பிரிவுக்கு அழைப்பு மேற்கொண்ட போதும் அங்கு ஊழியர்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்டுகின்றது.
மக்கள் கோரிக்கை
இதுகுறித்து கிளிநொச்சி காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையிலும் தீயை அணைத்து பின்னரே காவல்துறையினர் அந்த பகுதிக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயணைப்பு பிரிவானது 24 மணி நேர சேவையை வழங்க வேண்டிய ஒரு முக்கிய நிறுவனம் என்ற அடிப்படையில், இதைவிடமும் இன்னமும் பாரிய தீ விபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் தீயணைப்பு பிரிவு இவ்வாறு அலட்சியமாக இருந்தால் பாரிய அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே இவ்வாறான விபத்துகளோ அல்லது வேறு சம்பவங்களோ இடம்பெறும் பட்சத்தில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு பிரிவினர் உரிய நேரத்திற்கு சம்பவ இடத்திற்கு சென்று தமது கடமையை சரிவர ஆற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா
