தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து - பெண் பலி: இருவர் காயம்
தெற்கு அதிவேக வீதியில் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (24) மாலை தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் வத்தளைப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலை வட்டாரங்கள்
கொழும்பிலிருந்து மத்தல நோக்கிப் பயணித்த கார் ஒன்று, வீதியின் இடதுபுறத்திலிருந்த பாதுகாப்பு வேலியுடன் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் 30 மற்றும் 36 வயதுடைய இருவர் காயமடைந்ததுடன், அவர்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணை
காரின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்திற்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் கூறினர்.

சம்பவம் தொடர்பில் பின்னதூவ போக்குவரத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |