அரசாங்கத்திடம் மல்கம் ரஞ்சித் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
ஜனநாயக ஆட்சிக்கு புதிய அரசியலமைப்பின் தேவை எழுந்துள்ளதாக கொழும்பு பேராயர் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith) மெல்கம் கர்தினால் ரஞ்சித் சுட்டிக்காட்டியுள்ளார்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கும் கொழும்பு பேராயருக்கும் இடையில் நேற்று (05) இடம்பெற்ற சந்திப்பையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஜனநாயகத்திற்கு எதிரான ஊழல் மோசடிகளை விசாரணை செய்வதற்கான வலுவான பொறிமுறையை உருவாக்குவதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாக்குதலின் பின்னணி
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான தகவல்களை வெளியிடுவது மிகவும் முக்கியம்.
இதை யார் செய்தார்கள், என்ன காரணத்திற்காக, யாருடைய உதவியோடு செய்தார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் இலங்கையில் இதுபோன்ற பல விஷயங்கள் நடந்துள்ளன.
கொலைகள், காணாமல் போதல்கள் என பல விடயங்கள் உரிய முறையில் விசாரணை செய்யப்படவில்லை தற்போதுள்ள அரசியலமைப்பில் உள்ள பல்வேறு பலவீனங்களை போக்குவதற்கு தேவையான அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |