அநுரவை காப்பாற்றுவதில் மல்கம் ரஞ்சித் தீவிரம்
முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்ற பகுதிக்கு செல்வதை கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith) இன்றுவரை தவிர்த்து வருகின்ற நிலையில் யுத்த காலத்தில் கடும்போக்காக செயற்பட்ட அரசியல்வாதிகளுக்கு சாதகமான கருத்துக்களை கூறிவந்த மெல்கம் ரஞ்சித், பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது வரை குரல் எழுப்பவில்லை.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையை வெளிக்கொணர்வதன் மூலம் தற்போதைய அரசாங்கம் நீதியை நிலைநாட்டும் என்பதில் நம்பிக்கையுடன் இருப்பதாக அண்மையில் அவர் தெரிவித்திருந்தார்.
விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் அவ்வப்போது அவருக்கு தெரிவிப்பதாகவும் அரசு, படுகொலை குறித்து வெளிப்படையான விசாரணையை மேற்கொள்வதாகத் தெரிவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், (Anura Kumara Dissanayake), பதவியேற்றவுடன், கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு விஜயம் செய்து அங்கு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து புதிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
இவ்வாறான பிண்ணனியில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கேட்டு குரல் ஆரம்பத்தில் குரல் எழுப்பிய அவர், தற்போது அந்த விடயத்திலும் சிறிது அமைதி காத்து கருத்துக்களை வெளியிடுவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
இந்தநிலையில், இது தொடர்பில் கனடாவின் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்த விரிவான விடயங்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |