கர்தினால் மீது பொய் குற்றச்சாட்டு! சாமரவுக்கு எதிராக சட்டநடவடிக்கை
தனக்கு எதிராக தவறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீது கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ வெளியிட்டுள்ளார்.
கர்தினால் ரஞ்சித் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்துக்கள், மதக் குழுக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாமரவின் குற்றச்சாட்டு
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அருட்தந்தை சிரில் காமினி, “தற்போதைய இராணுவத் தளபதி, தனது பதவிக்காலத்தை நீட்டிக்கக் கோரி, இந்த ஆண்டு ஜூலை 2 ஆம் திகதி கர்தினால் ரஞ்சித்தை ஒரு பழக்கூடையுடன் சந்தித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தசனாயக்க குற்றம் சாட்டினார்.

இருப்பினும், அன்றைய தினம் கர்தினால், திருத்தந்தை பதினாறாம் லியோவால் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வத்திக்கானில் இருந்தார்,” என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கர்தினாலுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |