ஹோர்முஸ் நீரிணையில் இன்று நிகழ்ந்த அனர்த்தம் : கண்ணிவெடியில் சிக்கி சிதறியது சரக்குகப்பல்
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் அனுமதியின்றி சட்டவிரோதமான பாதையில் செல்ல முயன்ற சரக்குக் கப்பல் ஒன்று இன்று புதன்கிழமை ( 14) காலை, கடலில் விதைக்கப்பட்டகண்ணிவெடியில் சிக்கி கடலில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், சட்டவிரோதமாக அபாயம் மிகுந்த பாதையின் வழியாக சுமார் 2,500 கொண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற அந்தக் கப்பல் கண்ணிவெடியில் மோதி தீப்பிடித்து கடலில் மூழ்கியதாக, ஈரானின் புரட்சிகர காவல் படையின் கடற்படைப் பிரிவு அறிவித்துள்ளது.
கப்பல் மற்றும் அதன் மாலுமிகளின் நிலை
அமெரிக்கா உடனான போர் தொடங்கியதில் இருந்து கப்பல் ஒன்று மூழ்கியதாக, ஈரான் அறிவித்துள்ளது இதுவே முதல்முறை. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கப்பல் மற்றும் அதன் மாலுமிகளின் நிலை குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
IRGC Navy: A violating container ship that intended to pass through the unauthorized and high-risk route of the Strait of Hormuz struck a naval mine, exploded, and caught fire severely. https://t.co/fiJJM445ay
— IRNA News Agency ☫ (@IrnaEnglish) October 14, 2026
முன்னதாக, ஈரான் தடை விதித்ததைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்க படைகள் பாதுகாப்பு வழங்கி வருவதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் பற்றி எரிய ஆரம்பிக்கும் மத்திய கிழக்கு - எரிபொருள் நிலையங்கள் மீது கடும் வான்வழித் தாக்குதல்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |