நாளையதினம் நாடு திரும்ப இருந்த சீன பெண் பயணிக்கு ஏற்பட்ட நிலை
நாளையதினம்(06) சொந்த நாட்டிற்குச் செல்லவிருந்த சீனப் பிரஜை ஒருவரின் கடவுச்சீட்டு அடங்கிய சூட்கேஸ் இன்று (04) பிற்பகல் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது திருடப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்தனர்.
Fan Jie Ann என்ற சீன சுற்றுலாப் பயணி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காலியிலிருந்து மருதானை நோக்கி சென்ற விரைவு ரயிலில்
இன்றைய தினம் பிற்பகல் காலியிலிருந்து மருதானை நோக்கி சென்ற விரைவு ரயிலில் முறைப்பாட்டாளர் பயணித்த போது குறித்த பயணப்பொதிகள் யாரோ ஒருவரால் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
சீன பிரஜை மிகவும் கவலை
இன்றிரவு முதல் கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் அவர் தங்குவதற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நாளை (6) சிங்கப்பூர் சென்று அங்கிருந்து சீனா செல்வதற்காக விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ள சீன பிரஜை இந்த சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.