வடக்கில் 14 உணவகங்களுக்கு எதிராக வழக்கு: நீதிமன்றம் வழங்கிய கடுமையான உத்தரவு
சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த சில நாட்களாக உணவகங்கள் மற்றும் பலசரக்கு விற்பனை நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த சில நாட்களாக சங்கானை பிரிவு பொது சுகாதார பரிசோதகர், வட்டுக்கோட்டை பிரிவு பொது சுகாதார பரிசோதகர், அராலி பிரிவு பொது சுகாதார பரிசோதகர், சுழிபுரம் பிரிவு பொது சுகாதார பரிசோதகர்கள், தங்கள் பிரிவுகளில் திடீர் பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதன்போது, திகதி காலாவதியான உணவு பொருட்கள், பழுதடைந்த உணவு பொருட்கள், உரிய சுகாதார நடை முறைகளை பின்பற்றாத உணவகங்கள் என 14 உணவகங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்கள் சிக்கியுள்ளன.
174,000 தண்டம்
மேற்படி 14 உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களிற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்களால் இன்றையதினம் (21) மல்லாகம் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதனை தொடர்நது, இன்றையதினமே வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிமன்றம், உணவக உரிமையாளர்களிற்கு 174,000/= தண்டம் விதித்ததுடன் கடுமையான எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்