தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து பசில் ராஜபக்ச வெளியிட்ட தகவல்!
அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைப் பற்றி பேசுவது முறையற்றது என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறி லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இக்கலந்துரையாடலில் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் 56 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
மே பேரணி
இதன்போது மே மாதம் முதலாம் திகதி உலக தொழிலாளர் தினத்தை கொண்டாடுவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
கட்சியின் மே பேரணி பொரளை கெம்பல் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் உரையாற்றிய பசில் ராஜபக்ச, போராட்டத்தின் பின்னர் விமான நிலையத்திற்கு செல்வதற்கு கூட தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க தான் வழிசெய்தார் என குறிப்பிட்டுள்ளார்.
இன்று கலந்துரையாடல்
இந்த கலந்துரையாடலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் கலந்துகொண்டுள்ளார்.
இதேவேளை, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச மற்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் இன்று 21ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளது.
இதன்போது,அதிபர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பன பற்றி கலந்துரையாடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |