முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு எதிரான வழக்கு : நீதிமன்றின் உத்தரவு
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அவருக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு எதிரான வழக்கை, எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு இன்று (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக அறிக்கையொன்றை அன்றைய தினத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு
மேலும் அரச தரப்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு சார்பில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.

இதன்போது குறித்த நான்கு பேரில் மூவர், அகில விராஜ் காரியவசத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியாற்ற அமர்த்தப்பட்டதாகவும், மற்றைய நபர் அவருக்கென ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்தப்படவில்லை என்றும் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் செயல்களுக்கு உடந்தையாக இருந்ததாக இரண்டாவது சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகவே வழக்கு ஜனவரி 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |