யோசித மீதான பணமோசடி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவுக்கு சொந்தமான தனியார் வங்கி கணக்கொன்றில் 17 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டமை தொடர்பான வழக்கானது எதிர்வரும் ஒகஸ்ட் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவானது ஹோமாகம மேல் நீதிமன்றத்தினால் நேற்று (21.07.2026) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கு நீதிபதி கிரிஷாந்தி அமரதுங்க முன்னிலையில் விசாரணைக்க எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விசாரணை நடவெடிக்கை
இந்த வழக்கானது பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இதன் பூரண விசாரணைகள் நேற்றைய தினம் நடைபெற்றது.

வழக்கு விசாரணையின் போது பிரதிவாதியான யோசித திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தார்.
மேலும் பிரதிவாதி சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மென்டிஸ் முன்னிலையாகியிருந்தார்.
இதன்படி யோசித்தவின் தனியார் வங்கிக் கணக்கில் 17 மில்லியன் ரூபாய் வைப்பு செய்யப்பட்டமை தொடர்பாக, பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்ட இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை மார்ச் 10 அன்று ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்றம் அவரை ரூ.2 இலட்சம் மதிப்புள்ள இரண்டு ரொக்கப் பிணைகள் மற்றும் ரூ.50 இலட்சம் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதித்ததுடன் வெளிநாட்டுப் பயணத் தடை விதித்து, ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு உத்தவிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
4 நாட்கள் முன்