அமைச்சர் சமந்த வித்யாரத்னவுக்கு எதிராக வழக்கு தாக்கல்
அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஒன்றிடம் இருந்து தலா 100 மில்லியன் ரூபா இழப்பீட்டை கோரி, முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சியில் அமைச்சர் வெளியிட்ட அறிக்கையால் தான் அவமதிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்தப் முறைப்பாட்டில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, சுயாதீன தொலைக்காட்சி சேவை மற்றும் அதன் தலைவர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
100 மில்லியன்
மொனராகலை பகுதியில் அமைந்துள்ள ஒரு காணி தொடர்பாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன சமீபத்தில் வெளியிட்ட கருத்து முற்றிலும் பொய்யானது என்று கீர்த்தி தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால் தான் கடுமையாக அவமதிக்கப்பட்டதாகவும் கூறி, இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளார்.
மேலும், அமைச்சர் சமந்த வித்யாரத்ன மற்றும் சுயாதீன தொலைக்காட்சி சேவையிடமிருந்து தலா 100 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை வசூலிக்க உத்தரவிடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
புலம்பெயர்தலின் வழியாக ஈழப் போராட்டத்திற்குத் துணைநின்ற தமிழர்கள்… 7 மணி நேரம் முன்