மோசடி, பாலியல் வன்புணர்வு -ட்ரம்ப் மீது தொடரப்படவுள்ள வழக்குகள்
ட்ரம்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல்
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூயோர்க்கின் சட்டமா அதிபர் லெட்டிஷியா ஜேம்ஸ் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நியூயோர்க்கின் சட்டமா அதிபர் லெட்டிடியா ஜேம்ஸ், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மூன்று பிள்ளைகளுக்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.
வணிக மோசடி
அவர்கள் மீது வணிக மோசடிக்காக வழக்குகள் தொடரப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாலியல் பலாத்காரம்
இதேவேளை 27 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டிய பெண் எழுத்தாளர் ஒருவர் அவருக்கு எதிராக புதிய வழக்கைத் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, 1995-ம் ஆண்டின் பிற்பகுதி அல்லது 1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மிட்டவுன் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு கடையின் உடைமாற்றும் அறையில் தன்னை டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்தார்" என்று கூறி உள்ளார்.
இதுதொடர்பாக கரோலின் சட்டத்தரணி ராபர்ட்டா கப்லன் கூறும்போது, "டிரம்ப் மீது வருகிற நவம்பர் 24 ஆம் திகதி வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாகவும், இவ்வழக்கு அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் விசாரிக்கப்படலாம்" என்றும் தெரிவித்தார்.
டொனால்ட் டிரம்ப் மறுப்பு
இதற்கிடையே பெண் எழுத்தாளரின் குற்றச்சாட்டை டொனால்ட் டிரம்ப் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது, கரோல் தனது புத்தகத்தை விற்பதற்காக இந்தகுற்றச்சாட்டை கூறி உள்ளார்" என்றார். ஏற்கனவே டிரம்ப் மீது மொடல் அழகி ஒருவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது