அதிபர் நிதியத்திற்கு நிதி நன்கொடை
கிங்குசல ஆய்வுச் சங்கத்தின் ஸ்தாபக தலைவரும் ஓய்வுபெற்ற வலயக் கல்வி பணிப்பாளருமான சரத் சேனநாயக்கவினால் தனது ஆவணப்படுத்தல் மற்றும் விரிவுரைகள் ஊடாக கிடைக்கப்பெற்ற வருமானத்தில் இருந்து அதிபர் நிதியத்திற்கு வழங்குவதற்காக 2 மில்லியன் ரூபாவை இன்று (24) அதிபரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த தொகையை வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் அங்கவீனமடைந்தவர்களுக்கு செயற்கை கால்களை வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்ய உள்ளதாக அதிபரின் செயலாளர் தெரிவித்தார்.
அதிபர் நிதியத்தின் செயலாளர், அதிபர் அலுவலகத்தின் மேலதிகச் செயலாளர் டபிள்யூ. சரத் குமார, கிங்குசல ஆய்வுச் சங்கத்தின் செயலாளர் ஏ.பி.விக்ரமசிங்க, கிங்குசல சங்கத்தின் முன்னாள் இளைஞர் அலுவல்கள் செயலாளர் சட்டத்தரணி ஜயதிலக்க முதுகம உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.