கருணாவின் மனைவி பெயரில் பதுக்கப்பட்ட பணத்தொகை! ஆதாரப்படுத்திய பத்திரிக்கையாளர்
தமிழீழ போராட்டத்தின் கறுப்பு புள்ளி என அடையாளமிடப்பட்டு இன்றும் விமர்சனங்களுக்கு உள்ளாகும் விநாயகமூர்த்தி முரளிதரனின் மோசடிகள் தொடர்பில் பல கேள்விகள் காணப்படுகின்றன.
அதில் அவர் முன்னெடுத்த நிதி மோசடி விவகாரங்கள் தொடர்பில் இன்றும் வெளிவராத பல இரகசியங்கள் காணப்படுவதாக கூறப்படுகின்றன.
விடுதலை போராட்டக்காலத்தில் தாயகத்துக்காக, போரளிகளுக்காக என திரட்டப்பட்ட நிதிகள் கருணாவின் சட்டைப்பைகளுக்கும், துரோகத்தின் சாதனை வாழ்வுக்கும் கொட்டி தீர்க்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் தமிழ் மக்கள் மத்தியில் இன்றும் காணப்படுகின்றன.
இவ்வாறு அவர் செய்த மோசடிகள் தொடர்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராமன் ஆவணங்களை ஆதரத்துடன் வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு விடுதலைப்புலிகள் அமைப்பின் திசையை சிறிலங்கா இராணுவத்துக்கு காட்டிக்கொடுத்த கருணாவின் துரோகப்போராட்டத்தில் இடம்பெற்ற பல மர்மங்களை ஊடைக்கும் முகமாக ஐ.பி.சி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மூத்த ஊடகவியளாலர் நிராஜ் டேவிட் பல வியங்களை வெளிப்படுத்தியிருந்தார்.
அத்தோடு, மோசடியாக திரட்டப்பட்ட நிதிகளை இலங்கையிலும், வெளிநாடுகளிலும் அவர் எவ்வாறு மறைத்து வைத்திருந்தார் என்பதையும் தொடரும் காணொளியில் சுட்டிக்காட்டினார்...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |