சாதி பாகுபாட்டிற்கு தடை விதித்த முதல் அமெரிக்க நகரம் - முற்றாக எதிர்த்த இந்து அமைப்பினர் (படங்கள்)
அமெரிக்காவில் சாதிய பாகுபாட்டை தடை செய்த முதல் நகரமாக சியாட்டில் நகரம் உருவெடுத்துள்ளது.
அந்நகர கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பின் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தை முன்மொழிந்த சியாட்டில் நகர் கவுன்சிலர் க்ஷாமா சாவந்த், “சாதிய பாகுபாட்டிற்கு எதிரான இந்த போர் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போர்” என தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் பேசிய க்ஷாமா, “சாதிய பாகுபாடு மற்ற நாடுகளில் மட்டும் இல்லை அமெரிக்காவிலும் உள்ளது.
சாதி பாகுபாடு
தென் ஆசிய அமெரிக்கர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது அலுவலகங்களில் சாதிய பாகுபாட்டால் பாதிக்கப்படுகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் இந்த நடவடிக்கையை எதிர்த்த சில இந்து அமெரிக்க அமைப்பினர், ஏற்கனவே அமெரிக்க சட்ட இது போன்ற பாகுபாட்டை தடை செய்துள்ளது எனவும் தனியாக ஒரு சட்டம் தேவையில்லை எனவும் தெரிவித்தனர்.
எதிர்த்த இந்து அமைப்பினர்
மேலும், அவர்கள் வெளியிட்டுள்ள கடிதத்தில், இந்த சட்டம் ஒரு சமூகத்தினரை மட்டும் அவர்களது பூர்வீக நாடு மற்றும் பாரம்பரியத்தின் பெயரால் குறிவைக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.
வாஷிங்டன் நகரில் 2 சதவீதமே இந்திய அமெரிக்கர்கள் உள்ளதாகவும் அவர்கள் மத்தியில் சாதிய பாகுபாடு நிலவுவதாக ஆதாரம் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
