விபத்திற்கு முன் சாரதி கூறிய இறுதி வார்த்தை: தப்பியவரின் அதிர்ச்சி வாக்குமூலம்
பேருந்து வீழ்ந்து விபத்திற்குள்ளாவதற்கு முன்னர் பேருந்தின் பிரேக் செயலிழந்ததாக சாரதி தெரிவித்தார் என எல்ல வெல்லவாய பேருந்து விபத்தில் சிக்கிய நபரொருவர் தெரிவித்துள்ளார்.
எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று எதிரே வந்த ஜீப் வண்டியில் மோதி பள்ளத்தில் வீழ்ந்து நேற்றிரவு (04) பாரிய விபத்திற்கு உள்ளாகி இருந்தது.
விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையிர், 18 பேர் வரையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “பேருந்து விழுவதற்கு சிறிது நேரத்திற்கு முன், ஒரு வளைவில் செல்லும் போது பிரேக் செயலிழந்து விட்டதாக சாரதி தெரிவித்தார்.
அதற்கு நடத்துனர் உட்பட பயணிகள் அனைவரும் சிரித்ததுடன் சில பயணிகள், சாரதியை பார்த்து பொய் சொல்ல வேண்டாம் எனவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, இரண்டாவது வளைவில் செல்லும் போது, உண்மையில் பிரேக் செயலிழந்ததை நாங்கள் உணர்ந்தோம்.
இதன்பின்பு, எதிரே வந்த வாகனத்துடன் மோதி பேருந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்தது.
சுமார் ஒரு மணி நேரம் மயக்கமடைந்து, ஒரு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு நான் விழித்தேன், என்னால் நகர முடியவில்லை.
இதையடுத்து, சிறப்புப் படையினர் வந்து எங்களை மீட்டனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
