சட்டவிரோத செயற்பாடு - இன்றிரவு சிக்கினார் காவல்துறை உத்தியோகத்தர்
சுமார் 100,000 ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் காவல்துறையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் இன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் அஹுங்கல்ல காவல் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஆவார்.
கிடைத்த தகவலின் அடிப்படையில், களுத்துறை, கலஸ்சேன பிரதேசத்தில் சந்தேக நபரை சோதனையிட்ட காவல்துறை குழு, 6 கிராம் 570 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளைக் கண்டுபிடித்ததுடன், மோசடிக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கையடக்கத் தொலைபேசியையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சனத் குமாரவின் பணிப்புரைக்கமைய காவல் நிலையப் பொறுப்பதிகாரி உப காவல் பரிசோதகர் வீரசேனவினால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.