அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம்: முன்னாள் விமானியின் அதிர்ச்சி கருத்து
அகமதாபாத் விமான விபத்துக்கு விமானத்தின் அதிக எடை காரணமாக இருக்கலாம் என முன்னாள் விமானி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதே ஊடகஙகள் செய்தி வெளியிட்டுள்ளன.
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு 230 பயணிகள், 12 ஊழியா்களுடன் கடந்த ஜூன் 12-ஆம் திகதி பிற்பகல் 1.39 மணிக்கு புறப்பட்ட ஏா் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனா் ரக விமானம் ஏஐ 171, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது மோதி வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் ஒரே ஒரு பயணி தவிர விமானத்தில் இருந்த 241 பேரும் விமானம் விழுந்த இடத்தில் மருத்துவ மாணவா்கள் என 270 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனா்.
விபத்துக்கான காரணம்
நாட்டையே உலுக்கிய இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில் விமான விபத்துக்கான காரணம் குறித்து முன்னாள் விமானி கௌரவ் தனேஜா என்பவர் வெளியிட்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், “பிளைட்ரேடார் செயலி தரவுகளின் மூலமாக விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், புறப்படுவதற்கு வழக்கத்தை விட அதிக நேரத்தை எடுத்துக் கொண்டுள்ளது.
விமானத்தின் வேகம்
விமானம் புறப்படும்போது ஓடுபாதையில் தூசு கிளம்பியது இதனால் அந்த ஓடுபாதை முறையாக செப்பனிடப்படவில்லை என்று தெரிகின்றது.
ஓடுபாதை முடியும் இடத்தில் இருந்து விமானம் புறப்பட்டதும் மிகவும் அசாதாரணமானது, விமானம் ஓடுபாதையில் அதிக நேரம் ஓடிய பிறகு மேலெழும்பியது.

ஆனால் அதன் பின்னர் விமானத்தின் வேகம் குறைந்தது அப்படியெனில் விமானத்தில் ஏதோ பிரச்னை இருந்திருக்கிறது.
அதிக எடை காரணமாக விமானத்தை மேலெழுப்புவதிலேயே ஏதேனும் சிக்கல் இருந்ததா ? ஏனென்றால் இதற்கு முன்பு இதுபோன்ற விபத்துகள் நடந்துள்ளன.
அதிக எடை
1993 ஆம் ஆண்டு ஔரங்காபாத்தில் விமானத்தில் அதிக எடை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது, விமான நிறுவனங்கள் சரக்கு சேவைகளில் அதிக பணம் ஈட்டுகின்றன.
அதனால் விபத்துக்குள்ளான விமானம் அதிக எடை கொண்டதாக இருந்திருக்கலாம், ஆவணங்களில் குறைவான சரக்குகளையே ஏற்றுவதாகக் கூறும் விமான நிறுவனங்கள் உண்மையில் வழக்கத்திற்கு அதிகமாக எடையை ஏற்றுகின்றன.

விமானத்தில் அதிக எடைதான் விபத்திற்குக் காரணமா ? டெல் அவிவ் பகுதியில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று சரக்குகளின் எடையை சரியாக பதிவு செய்யாததால் விபத்துக்குள்ளானது.
எனவே, அகமதாபாத் விமான விபத்து தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு காத்திருக்கிறேன், விரைவில் வெளியிடுகிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்