இலங்கையில் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக இந்திய ரூபாய்

Central Bank of Sri Lanka Sri Lankan rupee Sri Lanka Tourism Sri Lanka Indian rupee
By Beulah Aug 02, 2023 10:30 AM GMT
Report

இந்திய ரூபாய் தொடர்பான அறிவிப்பொன்றினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இந்திய ரூபாய் தொடர்பான தவறான தகவல்களுக்கு விளக்கமளிக்க கூடிய வகையில் அவ்வறிவித்தல் அமைந்துள்ளது.

பன்னாட்டு வர்த்தகம் மற்றும் எல்லைகடந்த வங்கித்தொழில் கொடுக்கல்வாங்கல்கள் என்பவற்றை வசதிப்படுத்தும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கி காலத்திற்குக் காலம் பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களாக தெரிவுசெய்யப்பட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு அதிகாரமளிக்கின்றது.

1979 மே தொடக்கம் இலங்கை மத்திய வங்கி அவ்வப்போது பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களை அங்கீகரித்துள்ளது.

தற்போது பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களாக வங்கித்தொழில் சட்டம் மற்றும் வெளிநாட்டுச் செலாவணிச் சட்ட ஏற்பாடுகளின் கீழ் 2022 ஓகஸ்டில் பிந்தியதாக உட்சேர்க்கப்பட்ட இந்திய ரூபாயுடன் பின்வரும் 16 நாணயங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 

பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களின் அட்டவணை

இலங்கையில் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக இந்திய ரூபாய் | Cbsl Authorizing Inr Designated Currency

அவுஸ்திரேலிய டொலர்

கனேடிய டொலர்

சீன ரென்மின்பீ

டெனிஷ் குறோணர்

யூரோ

ஹொங்கொங் டொலர்

இந்திய ரூபா

ஜப்பானிய யென்

நியுசிலாந்து டொலர்

நோர்வே குறோணர்

Pஸ்டேர்லிங் பவுண்

சிங்கப்பூர் டொலர்

சுவிடன் குறோணர்

சுவிஸ் பிராங்க்

தாய்லாந்து பாத்

ஐக்கிய அமெரிக்க டொலர்

வர்த்தக உறவுநிலைகள்

இலங்கையில் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக இந்திய ரூபாய் | Cbsl Authorizing Inr Designated Currency

பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களாக வெளிநாட்டு நாணயங்களை அங்கீகரிப்பதன் முக்கிய நோக்கம் இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை ஊக்குவிப்பதாகும்.

மேலும், இரட்டை மாற்றுதலுடன் தொடர்புடைய மேலதிக பரிமாற்றுச் செலவுகளை அது குறைப்பதுடன் முறையான வங்கித்தொழில் வழியூடாக வர்த்தக் கொடுக்கல்வாங்கல்களை ஊக்குவிப்பதற்கு ஆதரவளிக்கும்.

உள்நாட்டு கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவிற்காக இலங்கையில் சட்டபூர்வமான நாணயமாக இலங்கை ரூபா தொடர்ந்தும் இருக்கும். 

2000 மார்ச்சில் இந்திய - இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை நடைமுறைக்கு வந்ததன் பின்னர் இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான வர்த்தகம் துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளது.

இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காகவும் குறிப்பாக இரு நாடுகளுக்குமிடையில் ஏற்கனவே காணப்படுகின்ற வணிக உறவுகளை ஊக்குவிப்பதற்காகவும் இலங்கை மத்திய வங்கி இலங்கையில் பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக இந்திய ரூபாவை அங்கீகரிப்பதற்கான இலங்கை மத்திய வங்கியின் விருப்பத்தை இந்திய நாணய ஆணையமாகிய இந்திய றிசேர்வ் வங்கிக்கு பல சந்தர்ப்பங்களில் அறிவித்தது.

அதற்கமைய, இந்திய றிசேர்வ் வங்கியின் ஒப்புதலுடன் 2022 ஓகஸ்டில் இலங்கையில் பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமொன்றாக இந்திய ரூபா இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இலங்கையில் பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமொன்றாக இந்திய ரூபாவின் பாவனையானது இந்திய றிசேர்வ் வங்கியின் எல்லாவிதமான கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டதாகும்.  

அனுகூலங்கள்

இலங்கையில் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக இந்திய ரூபாய் | Cbsl Authorizing Inr Designated Currency

பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக இந்திய ரூபாவை அங்கீகரிப்பது வர்த்தக் கொடுக்கல்வாங்கல்களுக்காக முறைசாரா வழிகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக வங்கித்தொழில் வழிகளை பயன்படுத்துவதற்கு வர்த்தகர்களை ஊக்குவித்து, இந்திய ரூபாவை ஐ.அ.டொலராகவும் ஐ.அ.டொலரை இலங்கை ரூபாவாகவும், மறுதலையாகவும் செய்யப்படும் இரட்டை மாற்றுதலுடன் இணைந்த மேலதிக கொடுக்கல்வாங்கல் செலவுகளைக் குறைத்து, சிறியளவிலான வர்த்தகர்களுக்கு விசேடமாக இந்திய ரூபா தொடர்புபட்ட சீரான வங்கித்தொழில் கொடுக்கல்வாங்கல்களை வசதிப்படுத்தல் உள்ளடங்கலாக இலங்கைக்கு பல அனுகூலங்களைக் கொண்டுவரும்.

மேலும், இலங்கைக்கான அதிக சுற்றுலா வழங்கி நாடாக தொடர்ந்தும் இந்தியா விளங்குவதனால் வங்கித்தொழில் கொடுக்கல்வாங்கல்களுக்கு பெயர்குறிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக இந்திய ரூபாவை அங்கீகரிப்பது இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக வசதிகளை வழங்கும். 

பெயர்குறிக்கப்பட்ட நாணயமாக இந்திய ரூபாவினை அங்கீகரித்தமையானது உள்நாட்டு கொடுப்பனவிற்கு தீர்ப்பனவிற்கு இலங்கையில் இந்திய ரூபாவை சட்ட பூர்வமான நாணயமாக ஏற்படுத்தியதாகாது.

இலங்கையில் வதிபவர்களுக்கிடையில் அல்லது அவர்கள் மத்தியில் நிறைவேற்றப்படுகின்ற ஏதேனும் கொடுக்கல்வாங்கல் இலங்கையின் சட்டபூர்வ நாணயமாகவிருக்கின்ற இலங்கை ரூபாவிலேயே இருத்தல் வேண்டும்.

அதற்கமைய, இந்திய ரூபா தொடர்பில் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்ற தவறான கூற்றுக்களால் பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது என இலங்கை மத்திய வங்கி கோருகின்றது.  


ReeCha
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025