இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
திறைசேரி உண்டியல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (CBSL) முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, ஒரு லட்சத்து 40,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 2 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 20,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனை செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
திறைசேரி உண்டியல்கள்
மேலும் 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனை செய்யப்படவுள்ளன.
364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை பெப்ரவரி 2025 இல் 4.2% ஆக இருந்த பணவீக்கம் மார்ச் 2025 இல் 2.6% ஆக அதிகரித்துள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் 2025 மார்ச்சில் உணவு வகை பணவீக்கம் 0.6% ஆக அதிகரித்துள்ளதுடன் இது பெப்ரவரியுடன் ஒப்பிடும் போது 0.6 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
