பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பை உருவாக்கியுள்ள மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு
மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு முடிவால் பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பை உருவாக்கும் என எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
வட்டி விகிதங்களை உயர்த்துவது மக்களின் செலவு செய்யும் திறனைக் கட்டுப்படுத்துவதாகவும், இது எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மேலும் குறைக்கக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.7 சதவீதம் எனக் கூறப்பட்டாலும், வரி வருவாயிலிருந்து 0.7 சதவீதப் பங்களிப்பே பெறப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம்: சரத் பொன்சேகா வாக்குமூலம்
மக்கள் செலவழிக்க வேண்டிய தொகை
இந்தச் சூழ்நிலையில், விரும்பிய பொருளாதார வளர்ச்சியை அடைவதும், அதன் பலன்களை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதும் மேலும் தாமதமாகும்.

பணவீக்கம் இப்போது 9% ஆகப் போகிறது என்று மத்திய வங்கி தொடர்ந்து கூறி வருகிறது.
எனவே, தேவைப் பக்கத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, மக்கள் செலவழிக்க வேண்டிய தொகையைக் குறைக்கும் பொருட்டு வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுகின்றன.
இதனால் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சியும் முன்னேற்றமும் தொடர்ந்து சரிவைச் சந்திக்கும். உண்மையில், பலருக்குத் தெரியாத ஒரு விடயம் என்னவென்றால், பொருளாதார வளர்ச்சி 4.7% என்று கூறப்பட்டாலும், அதில் 0.7% வரிகளாகும்.
தரவுகளைச் சரியாகப் பகுப்பாய்வு செய்தால், இந்த வரிகள் மூலமாகவே பொருளாதாரம் கணிசமாக வளர்ந்திருப்பதை ஒருவர் காண முடியும்.
அத்தோடு, எதிர்பார்க்கப்படும் பொருளாதார வளர்ச்சியும், அந்த வளர்ச்சியின் பலன்கள் மக்களுக்கு விநியோகிக்கப்படுவதும் மேலும் தாமதப்படுத்தப்படுவதை நான் காண்கிறேன்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |