தொடர் வீழ்ச்சி காணும் இலங்கையின் டொலர் கையிருப்பு - மத்திய வங்கி
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) மொத்த வெளிநாட்டு கையிருப்பு தொடர்ந்து மூன்றாவது மாதமாகவும் வீழ்ச்சியைக் கண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கை மத்திய வங்கியின் மொத்த வெளிநாட்டு கையிருப்பு 6,091 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகி இருந்தது.
இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்த தொகையைவிட 360 மில்லியன் டொலர்கள் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய வங்கி ஆளுநர்
மொத்த உத்தியோகபூர்வ கையிருப்புக்கள் கருவூலத்தில் உள்ள பண மற்றும் நிதி கையிருப்புகளால் ஆனதுடன் பொதுவாக வெளிநாட்டு கடன்கள் மற்றும் மானியங்களிலிருந்து கிடைக்கிறது.

இதேவேளை வருட இறுதிக் கடனைத் திருப்பிச் செலுத்தியதன் காரணமாக ஆண்டு இறுதி கையிருப்பு குறைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க (Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக வளர்ச்சி போக்கில் இருந்த வெளிநாட்டு கையிருப்பு, கடந்த ஆண்டு ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வீழ்ச்சிப் போக்கைப் பதிவு செய்திருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..! 13 மணி நேரம் முன்