காவல்நிலையங்களுக்கு சிசிரிவி கமரா: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
Sri Lanka Police
Human Rights Commission Of Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
காவல்நிலையங்களில் பாதுகாப்பு கமராக்களை நிறுவ பரிந்துரையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பரிந்துரையானது, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, காவல் நிலையங்களின் வரவேற்புப் பகுதிகள், செல்கள் மற்றும் தடுப்பு மையங்களில் குறித்த கமராக்களை பொறுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பதிவாகும் மரணங்கள்
காவல்நிலையங்களில் பதிவாகும் மரணங்களைத் தடுப்பதற்கான பொதுவான வழிகாட்டுதல்களின் கீழ் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த பரிந்துரைகளைச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில் வெலிகடை காவல்நிலையத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக பாரிய சர்ச்சைகள் உருவாகியிருந்ததன் பின்னணியில் குறித்த பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி