விடுதலைப் புலிகளுக்கு விற்கப்பட்ட சலேவின் சித்திரவதை காட்சிகள்! கம்மன்பில பெரும் குற்றச்சாட்டு
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அரச புலனாய்வு சேவையின் பிரதானி சுரேஸ் சலே சித்திரவதை செய்யப்பட்ட சிசிரிவி காட்சிகள் விடுதலைப் புலிகளுக்கு விற்கப்பட்டிருக்கலாம் என பிவித்துரு ஹெல உறுமியவின் தலைவர் உதய கம்மன்பில சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இந்த மனிதாபிமானமற்ற சித்திரவதை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு புலிகளுக்கு மிக அதிக விலைக்கு விற்கப்பட்டதாக கூறப்படும் ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அதன்படி, இந்த நடவடிக்கை தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் மற்றும் மனித உரிமை மீறல் என கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டின் சட்டம் ஒழுங்கு
எனவே இந்தச் சம்பவம் தொடர்பில் உரிய பொறுப்புள்ள திணைக்களங்களால் துரிதமான துல்லியமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இவ்வாறான செயற்பாடுகளினால் நாட்டின் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவது மிகவும் ஆபத்தானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |