ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீடிப்பது சாத்தியமற்றது : ட்ரம்ப் அறிவிப்பு
ஈரானுடனான போர் நிறுத்தம் வாஷிங்டன் நேரப்படி புதன்கிழமை மாலைக்குள் முடிவுக்கு வரும் என்று இப்போது கருதுவதாகவும், ஆனால் ஒரு உடன்பாடு எட்டப்படாவிட்டால் அதை மேலும் நீட்டிப்பது மிகவும் சாத்தியமற்றது எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
ஏப்ரல் 7 ஆம் திகதி மாலை தொடங்கிய இந்த போர் நிறுத்தம் முதலில் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில்"நான் அதை நீடிப்பது மிகவும் சாத்தியமற்றது," என்று டரம்ப் ப்ளூம்பெர்க்கிற்கு அளித்த ஒரு தொலைபேசி நேர்காணலில் கூறியுள்ளார்.
அத்துடன் ஒரு மோசமான ஒப்பந்தத்தைச் செய்ய நான் அவசரப்படப் போவதில்லை. நமக்கு உலகில் உள்ள அத்தனை நேரமும் இருக்கிறது எனவும் ட்ரம்ப் அந்த நேர்காணலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறுத்தம்
ஒரு உடன்பாடு எட்டப்படாவிட்டால், போர் உடனடியாக மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்ப்பீர்களா என்று கேட்டபோது, "உடன்பாடு எதுவும் இல்லை என்றால், நான் நிச்சயமாக எதிர்பார்ப்பேன்“ என்று ட்ரம்ப் பதிலளித்தார்.

முன்னதாக, போர் நிறுத்தத்தை நீடிக்க ஒப்புக்கொள்வதா இல்லையா என்பது குறித்து ட்ரம்ப் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகிறார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநீலையில், கடந்த வாரம் செய்தியாளர்களுடனான ஒரு கேள்வி-பதில் அமர்வில், போர் நிறுத்தத்தை நீடிப்பீர்களா என்று அவரிடம் ஐந்து முறை கேட்கப்பட்டபோது அவர் மூன்று வெவ்வேறு பதில்களை அளித்ததாக கூறப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |