முன்கூட்டிய பொதுத் தேர்தலை நிராகரித்தார் பிரித்தானியாவின் புதிய பிரதமர்
பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆண்டி பர்ன்ஹாம், முன்கூட்டிய பொதுத் தேர்தலை நடத்தும் எண்ணம் தமக்கு இல்லை என்று அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் கியர் ஸ்டார்மரிடமிருந்து அதிகாரப் பொறுப்பை ஆண்டி பர்ன்ஹாம் கடந்த திங்கட்கிழமை ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து, நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மிகப்பெரிய மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர் அறிவித்திருந்தார்.
அணுகுமுறையில் மாற்றங்கள்
இந்த நிலையில், ரீஃபார்ம் யுகே (Reform UK) கட்சியின் தலைவர் நைஜல் ஃபாரேஜ், புதிய பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இதுகுறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் ஆண்டி பர்ன்ஹாம், “நாம் நாடாளுமன்ற ஜனநாயக முறையில் வாழ்கிறோம். 2024 பொதுத் தேர்தலில் மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் அறிக்கையின் அடிப்படையிலேயே நான் செயல்படுகிறேன்.
அதற்குள் எனது அணுகுமுறையில் மாற்றங்களை கொண்டு வருகிறேன். ஆனால் இப்போது நாட்டைச் சீராக இயங்கச் செய்வதே மிக முக்கியமான முன்னுரிமையாகும்.
இந்த நேரத்தில் பொதுத் தேர்தலை நடத்துவது அந்த முக்கியப் பணிகளை தாமதப்படுத்தும்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 2024 பொதுத் தேர்தலில் மக்கள் வாக்களித்தது வேறு தலைவரின் தலைமையிலான கட்சிக்காக என்பதால், புதிய பிரதமர் பொதுமக்களிடம் புதிய ஆணையைப் பெறுவதற்காக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற கருத்தும் நாட்டில் பரவலாக நிலவி வருவதாக பிரித்தானிய தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
பிரித்தானியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்! ஆங்கிலக் கால்வாய் வழி பாதைகளில் ஈரானின் உளவுத்துறை வலையமைப்பு...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |