கிளிநொச்சியில் புதையல் தோண்டிய மின்சார சபை ஊழியர்கள் கைது!
கிளிநொச்சி மின்சார சபை சுற்றுலா விடுதியில் புதையல் தோண்டிய நான்கு மின்சார சபை ஊழியர்கள் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (11) இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி அறிவியல் நகர் சிறப்பு அதிரடிப்படை முகாமின் அதிகாரி உள்ளிட்ட குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (11) கிளிநொச்சி மின்சார சபை சுற்றுலா விடுதியில் ஓர் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
விசேட அதிரடிப் படையினரால் மீட்பு
இதன் போது விடுதி பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த அனுராதபுரம் மின்சார சபையில் பணியாற்றும் 04 ஊழியர்கள் கைது செய்யப்பட்டதுடன் புதையல் தோண்டுவதற்கு பயண்டுத்திய பொருட்கள் என்பன விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பின்வரும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கிளிநொச்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, அரச நிலத்தில் புதையல் தேடும் நோக்கத்திற்காக உரிமம் இல்லாமல் அகழ்வாராய்ச்சி செய்தல் மற்றும் அரச சொத்தை தவறாகப் பயன்படுத்துதல் எனும் குற்றச்சாட்டுகளில் சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |