மக்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சிகர தகவல் -அதிகரிக்கிறது மின்கட்டணம்?
srilanka
increase
electricity
bill
ceb
By Sumithiran
இலங்கை மின்சார சபை (CEB) மின் கட்டணத்தை அதிகரிக்க கோரியுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, மின்சாரசபை விடுத்த கோரிக்கையை பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.
மின்கட்டணத்தின் விலையை உயர்த்தும் முறை குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
எனினும், ஆணைக்குழு விரைவில் விலை அதிகரிப்புக்கு அனுமதி அளிக்காது என்று ரத்நாயக்க குறிப்பிட்டார். நாடு மின் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில், மின் கட்டணத்தை அதிகரிப்பது நெறிமுறையாக இருக்காது என்றார் அவர்.
இந்த நேரத்தில் மின் கட்டண விலையை அதிகரிப்பானது அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புடன் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சுமையை மேலும் அதிகரிக்கும் என்றும் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி