EPF பெறுவோருக்கு மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
Sri Lanka
Economy of Sri Lanka
employee provident fund
By Thulsi
2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான ஊழியர் சேமலாப நிதி (EPF) பெறும் உறுப்பினர்களின் கணக்குகளின் அறிக்கைகள், உரிய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உறுப்பினர்கள் தங்கள் புதுப்பிக்கப்பட்ட கணக்கு அறிக்கைகளை தங்கள் நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளுமாறு மத்திய வங்கி கோரியுள்ளது.
அதேவேளை, கணக்கு அறிக்கைகளில் வரவு வைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்கள், தேசிய அடையாள அட்டை எண்கள் அல்லது பங்களிப்புகள் குறித்து ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால், அவற்றை 0112-206690 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தெரிவிக்கலாம் என்றும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்