இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Kathirpriya
in பொருளாதாரம்Report this article
இலங்கை வங்குரோத்து நிலையில் உள்ளதாக அரசாங்கம் ஒருபோதும் பிரகடனப்படுத்தவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வங்குரோத்து நிலை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,160,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
ஏல விற்பனை
எதிர்வரும் 31 ஆம் திகதியே குறித்த ஏல விற்பனை இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளது
அரசாங்கம் குறிப்பிடவில்லை
அவற்றுடன் 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை நாடு வங்குரோத்து நிலையில் உள்ளதாக அரசாங்கம் குறிப்பிடவில்லை என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
