சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளிலிருந்து விலகுவது பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் : மத்திய வங்கி
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளின்படி செயல்படுவது சவாலானதாக இருந்தாலும், அவற்றிலிருந்து விலகுவது நிதி அமைப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் மாற்ற முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக அறிக்கையில்,
பொது நிதிக் கொள்கைகள்
“பொது நிதிக் கொள்கைகள் உட்பட சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி குறித்த ஒப்பந்தத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் கொள்கை சீர்திருத்தங்களின் கட்டமைப்பிற்குள் தொடர்ந்து பணியாற்றுவது அவசியம்.
எனவே, பொருளாதாரத்தில் நிலவும் பிரச்சினைகளை முன்னெச்சரிக்கையுடன் நிவர்த்தி செய்யக்கூடிய வலுவான மற்றும் பொருத்தமான கொள்கை கட்டமைப்பை நிறுவுதல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் மற்றும் சரியான நேரத்தில் நிலையான கொள்கைகளை சரியான முறையில் நடைமுறைப்படுத்துதல் ஆகியவை முக்கியமானவை ஆகும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |