திவாலாகும் நிலையில் இலங்கை!! மத்திய வங்கியின் இறுதிக்கட்ட முயற்சி
நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு நிலவுகின்ற நிலையில் இறுதிக்கட்டமாக இலங்கை மத்திய வங்கி வெளிநாட்டு வாழ் இலங்கையரிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளது.
அந்நிய செலாவணியை அதிகரிக்க முயற்சி
நாட்டில் அந்நிய செலாவணியை அதிகரிக்கும் முகமாக வெளிநாடுகளில் வாழ்வோர், தொழில் புரிவோர் தங்கள் ஊதியத்தை தங்கள் அனுப்புக்குரியவர்களுக்கு உரிமம் பெற்ற வங்கிகள் அல்லது நிறுவனங்கள் ஊடக அனுப்பி நாட்டிற்கு ஆதரவளிக்குமாறு மத்திய வாங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு மத்திய வங்கி இதனை தெரிவித்துள்ளது.
நீங்கள் பணம் அனுப்புவது ஏன் அவ்வளவு முக்கியத்துவமானது, அது எவ்வாறு பயன்படுகிறது, நாட்டிற்கு பயனளிக்கும் முகமாக எவ்வாறு பணம் அனுப்புவது போன்ற தலைப்புகளில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணம் அனுப்பும் பரிவர்த்தனைகள் இலங்கையின் அத்தியாவசிய தேவைகளான எரிபொருள், எரிவாயு, மருந்து மற்றும் உணவு போன்றவற்றை நிறைவேற்ற உதவும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பணம் அனுப்புவதற்கான முறையான வழிகளைப் பயன்படுத்துவது இலங்கைக்கு சர்வதேச அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள உதவும் என்றும் மத்திய குறித்த அறிவிப்பில் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, வெளிநாடுகளில் தொழில் புரியம் இலங்கையர் தங்கள் ஊதியத்தை வங்கிகளின் ஊடாக மாத்திரம் அனுப்புமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்புடைய செய்தி, இறுதிக்கட்ட முயற்சியில் இலங்கை அரசு! வெளிநாட்டு வாழ் இலங்கையர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
