ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ள மத்திய வங்கி: சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு!
இலங்கை மத்திய வங்கியானது, தொடர்ச்சியாக இரண்டு வருடங்களாக பில்லியன் கணக்கான ரூபாய் நட்டத்தை பதிவு செய்திருந்த போதிலும், அதன் வரலாற்றில் மிகப்பெரிய வித்தியாசத்தில் தனது ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “2023 இல் இலங்கை மத்திய வங்கியின்(Central Bank of Sri Lanka) நிகர இழப்பு 114 பில்லியன் ரூபாய்கள் ,2022ல் நிகர இழப்பு 374 பில்லியன் ரூபாய்கள் ஆகும்.
இந்தநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் தொடர்ச்சியாக நட்டத்தை சந்திக்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தின் சலுகைகள், ஊக்குவிப்பு மற்றும் சம்பள உயர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டு இடைநிறுத்தப்படும் என்பதே வழமையான செயற்பாடாக இருக்கும்.
அதிகூடிய சம்பள உயர்வு
எவ்வாறாயினும், மத்திய வங்கி தனது ஊழியர்களுக்கு அதிகூடிய சம்பள உயர்வை வழங்கி வருகின்றது.
எனவே, நாட்டை ஏமாற்றியதற்காக மத்திய வங்கியின் ஆளுநரும் அதன் நிர்வாக சபையும் உடனடியாக பதவி விலக வேண்டும்.
அரசாங்கம் மற்றும் வங்கிகளுக்கு கடன் வழங்கி வட்டியை வசூலிப்பதன் மூலம் மத்திய வங்கி இலாபம் ஈட்டக்கூடிய ஒரு வழிமுறை உள்ளது.
பணத்தை அச்சிடுவதற்கு மத்திய வங்கிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதால் இது சாத்தியமாகிறது” என்று உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |