கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவை காப்பாற்ற முயன்ற பாகிஸ்தானியருக்கு கிடைத்த கௌரவம் (வீடியோ)
imran khan
pakistan
srilankan
certificate
By Sumithiran
பாகிஸ்தான், சியல்கோட்டில் இலங்கையரான பிரியந்த குமார எரித்து கொலை செய்யப்படும்போது அவரதுஉயிரைக் காப்பாற்ற முயன்ற பாகிஸ்தானியரான மாலிக் அத்னன், பிரதமர் இம்ரான் கானினால் ‘துணிச்சலுக்கான விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அவரது மனிதாபிமான செயலானது முழு பாகிஸ்தானுக்கும் கௌரவத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் இம்ரான் கான் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதற்கமைய, குறித்த நபரின் மனிதாபிமான செயலை பாராட்டி ‘ Tamgha-i-Shujaat’ என்ற அதியுயர் விருதினையும் வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
وزیراعظم عمران خان کی جانب سے ملک عدنان کو بہادری اور شجاعت پر توصیفی سند سے نوازا گیا۔ pic.twitter.com/nID3efDCUn
— PTI (@PTIofficial) December 7, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்