தங்காலையில் கூட்டம் நடத்தும் போது பரீட்சை கண்ணுக்கு தெரியவில்லையா: ஜனாதிபதியிடம் கேள்வி!
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்மொழிந்த வரவு செலவு திட்ட உரை நான்கு மணித்தியாலம் நீடித்தமை தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க விமர்சித்துள்ளார்.
ஜனாதிபதியின் நான்கு மணித்தியால வரவு செலவு திட்ட உரையில் ஒரு மணித்தியாலம் நாமல் ராஜபக்சவை விமர்சித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் தற்போது நடைபெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வரவு செலவு திட்ட உரை
வெளிநாட்டு தூதர்கள் வரவு செலவு திட்ட உரை எப்போது நிறைவடையும் என காத்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி நேற்று (20.11.2025) தங்காலையில் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தும் போது உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் அறிந்திருக்கவில்லையா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் உரையின் இடைநடுவே சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச பொதுப் பேரணிக்கு வருகைத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
2 நாட்கள் முன்