வாகன அனுமதி பத்திர விவகாரம்: அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த சாமர சம்பத்
வாகனங்களுக்கான அனுமதிபத்திரத்தை எரித்து நெற்றியில் தேய்த்து கொள்ளும் நிலையில் அரச உயர் அதிகாரிகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், அரச உயர் அதிகாரிகள் 24000 பேருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி பத்திரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும்.
அனுமதி பத்திர விவகாரம்
சபாநாயகரே நீங்களும் சுகாதார துறையில் இருக்கும் போது பெற்றுக் கொண்டிருப்பீர்கள் என நினைக்கின்றேன” என கூறியுள்ளார்.
இதற்கு பதில் வழங்கிய பிரதியமைச்சர், “நாங்கள் அனுமதி பத்திர விவகாரம் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்.அதற்கான வேறு பதில்கள் இல்லை” என்றார்.
எனினும், அதற்கு பதிலளித்து பேசிய சமார சம்பத் தசநாயக்க, அரச உயர் அதிகாரிகளே அரசாங்கத்தை வழிநடத்துகின்றனர்.
ஆதலால் அவர்களின் சேவையை சீராக பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அனுமதி பத்திரத்தை வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
