அமெரிக்கா, கனடாவில் குடியேறவே தாக்குதல் நாடகம்? குற்றச்சாட்டை மறுக்கிறார் சாமுதித சமரவிக்ரம
அரசியல் தஞ்சம் கோரி அமெரிக்கா அல்லது கனடாவில் குடியேறுவதற்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கான சூழலை உருவாக்கவே தனது வீடு தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரம மறுத்துள்ளார்.
தமக்கு நீண்ட காலமாக அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான நுழைவு விசா வழங்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தானும் தனது குடும்பத்தினரும் ஏற்கனவே கனடாவிற்குள் நுழைவதற்கான விசாவைப் பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
எனினும், இந்த தாக்குதலின் பின்னணியில் அவர் இருப்பதாக யாராவது சந்தேகம் இருந்தால், விசாரணைக் குழு தேவையான விசாரணைகளை மேற்கொண்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கு ஆதரவாக தான் மற்றும் தனது மனைவியின் கைரேகைகள் மற்றும் மொபைல் போன் தரவுகள் விசாரணைக் குழுவிடம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இலங்கையை விட்டு வெளியேறி வேறு நாட்டில் குடியேறும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரச தொலைக்காட்சிக்குவழங்கிய நேர்காணலில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
