சுமந்திரனுடைய வீழ்ச்சிக்கு சாணக்கியனே காரணம்: கடுமையாக சாடும் வியாழேந்திரன்
சுமந்திரனுடைய தோல்விக்கு சாணக்கியனுடைய அநாகரிகமான நடவடிக்கைகள் மற்றும் பேச்சுக்கள் தான் முக்கிய காரணம் என இராஜாங்க அமைச்சரும் முற்போக்கு தமிழர் கழக ஒருங்கிணைப்பாளருமான சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் ஒன்றிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறீதரனின் வெற்றிக்கு அவரின் பரந்த தன்மை தான் காரணம். தமிழரசுக்கட்சியின் அடிப்படை கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
எல்லோரையும் ஒன்றிணைக்ககூடிய ஒரு கொள்கை கோட்பாடு தமிழரசுக்கட்சிக்குள் வர வேண்டும்.எங்களுடைய இனத்தின் இருப்பை பாதுகாப்பதற்குரிய யதார்த்தமான அரசியலை கட்டமைப்பதாக இருக்க வேண்டும்.கற்பனைவாத அரசியலில் தொடர்ந்து பயணிக்க முடியாது.
இந்த நாட்டிலே யுத்தம் இடம்பெற்றபோது இதே மண்ணிலே தான் நாம் இன்றுவரை இருக்கின்றோம்.ஆனால் சாணக்கியனைப் போல் யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் நாம் நாட்டிற்குள் வரவில்லை.
இவரைப் பற்றி வரலாறு தெரியாதவர்களுக்கு இவர் யார் என்று கூறலாம்.அதை நம்புவதற்கு ஒரு கூட்டம் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு சாணக்கியனைப்பற்றி கூறத்தேவையில்லை.இங்குள்ள மக்களுக்கும் நன்றாகத் தெரியும்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |