''விடுதலைப் புலிகளுடன் சாணக்கியனுக்கு தொடர்பு" நாடாளுமன்றத்தில் அச்சுறுத்தல்
சாணக்கியன் எதிரான கருத்து
இலங்கை முழுவதும் கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்து, அவர்களின் சொத்துக்களுக்கு அழிவை ஏற்படுத்திய சம்பவத்திற்கு ஆதரவாக இராசமாணிக்கம் சாணக்கியன் கருத்து வெளியிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தக் கருத்து தொடர்பில் மன்னிப்புக் கோருவதுடன், அதனை மீளப் பெற வேண்டும் என நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்த பிரதமர், அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
இதற்கு பதில் கொடுத்த சாணக்கியன்,
எனது 30 நிமிட உரையில் ஒரு பகுதியை எடுத்து வைத்துக்கொண்டு, பிரதமர் அந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். எனது உரையை நான் சபையில் சமர்ப்பிக்கின்றேன். யார் வேண்டுமாயினும் பார்க்க முடியும்.
சாணக்கியனுக்கு நாடாளுமன்றில் கடும் எச்சரிக்கை விடுத்த ரணில்! |
என்னையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் தொடர்புபடுத்தி பிரதமர் கருத்து வெளியிட்டுள்ளார்.
மே மாதம் 6 ஆம் திகதியும் இதற்கு முன்னரும் பிள்ளையானுடன் எனக்கு தொடர்புகள் காணப்படுவதாக பொய்யான கருத்தை வெளியிட்டார்.
இதுபோன்ற விடயத்தை செய்ய வேண்டாம் என ஆறு தடவைகள் பிரதமராக இருந்தவரிடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன். எமக்கும் அவர் தொடர்பில் கதைக்க முடியும். பட்டலந்த அறிக்கை குறித்து எம்மாலும் கூற முடியும் - என்றார்.
பிரமித்தி பண்டார தென்னக்கோனி்ன் எதிரப்பு
இராசமாணிக்கம் சாணக்கியனின் கருத்துக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித்தி பண்டார தென்னக்கோனும் தனது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளார்.

